
பா.ஜன.தா. எம்.பி. கங்கனா ரணாவத், அண்மையில் விவசாய சட்டம் குறித்து ஊடகங்கள் கேள்வி கேட்ட போது, விவசாயிகள் பிரதமர் மோடியிடம் விவசாய சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டுமென கேட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது கருத்துக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய சட்டம் முன்மொழியப்பட்ட போதே பலர் அதை ஆதரித்தனர்; ஆனால், அதனை பிரதமர் மிகுந்த உணர்வுடனும் அன்புடனும் மீண்டும் விலக்கி விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
. அவர் தனது கலைஞர் அடையாளத்திலிருந்து, பா.ஜன.தா. கட்சியின் ஒருவராகவே செயல்பட வேண்டும் எனக் கூறி, தனது கருத்துக்கள் கட்சியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் தன்னுடைய கருத்துக்கள் யாரையும் துன்புறுத்திருந்தால் , அதற்கு வருந்துகிறேன் என்றும், நான் கூறியதை திரும்பப் பெறுகிறேன் என அவர் கூறினார்.