
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் இன்று அவருடைய முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய நிலையில் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் மற்றும் சீமான் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு திரையுலக பிரபலங்களான விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சூர்யா, பிரபு, சிபிராஜ், லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். என்னுடைய நீண்ட கால நண்பரான விஜயின் புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் சினிமாவில் முதல் முறையாக வந்த போது நான் நடிகர் விஜயின் படத்தை தான் முதல் முறையாக தயாரித்தேன். அவருடைய மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக முதல் முறையாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.