
கிரிக்கெட் உலகில் இரு பெரும் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா ஆவார்கள். இவர்கள் இருவரும் பேட்டிங்கில் அற்புதமான வீரர்கள். இந்நிலையில் கிரிக்கெட் உலகில் அற்புதமான பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் என்று பிரையன் லாரா பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கார்ல் ஒரு அற்புதமான வீரர். சச்சின் டெண்டுல்கர் ஆல் கூட அவரை நெருங்க முடியாது. அவர் பேட்டிங் செய்வது மிகவும் அற்புதமாக இருக்கிறது. மேலும் கேப்டனாக மட்டுமின்றி அவருடைய தனிப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் அவர் எவ்வளவு அற்புதமான வீரர் என்பது புரியும் என்று கூறியுள்ளார்.