சீனாவில் ஒரு தந்தை தன்னுடைய மகனை ஹோம் ஒர்க் செய்யுமாறு கண்டித்துள்ளார். அதாவது 10 வயது சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாமல் செல்போனில் நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் அவருடைய தந்தை வீட்டு பாடத்தை ஒழுங்காக செய்யுமாறு கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுவன் கோபத்தில் தன்னுடைய தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாக கூறி காவல் நிலையத்திற்கு போன் போட்டு தகவல் கொடுத்துள்ளார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தியதில் அபின் பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டது. அது தன்னுடைய மருந்து பயன்பாட்டுக்காக வைத்திருந்தேன் என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார். இருப்பினும் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தந்தை கண்டித்ததற்காக போதை பொருள் வைத்திருந்ததை மகன் போலீசுக்கு போன் போட்டு காட்டி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.