
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் மகாராஜா என்ற படம் உருவாகி ரிலீஸ் க்கு தயாராக இருக்கிறது. இதனுடைய ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஜா படத்திற்கான பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டி குறித்து பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உப்பன்னா படத்தில் கீர்த்திஷெட்டியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.
ஆனால் அதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். மகளாக நடித்த பெண்ணோடு எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஜய் சேதுபதி, உப்பன்னா படப்பிடி ப்பு கடைசி நாளில் படப்பிடிப்பு சமயத்தில் அந்த பெண்ணிடம் என் பையன் உன்னைவிட நாலைந்து வயதுதாம்மா சின்ன பையன். நீ என்னை உன்னோட அப்பாவா நினைச்சுக்கோன்னு சொன்னேன்.
அப்படி நினைச்சு என்னை ட்ரீட் பண்ணுன்னு சொல்லிட்டேன். ஒரு பொண்ணை பார்த்து அப்பாவா நினைச்சுக்கோமான்னு சொன்ன பிறகு எப்படி ரொமான்ஸ் பண்றது. 2019 ல உப்பன்னா படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் 2022 ல கூட்டி வச்சு ஹீரோயினா நடின்னு சொன்னா எப்படி? என்னை அப்பாவை நினைச்சுக்கோமான்னு நான் சொல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று பேசியுள்ளார்.