
ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில், தனது திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, 28 வயதான கெளரவ் என்பவர் பயங்கரமாக தாக்கப்பட்டதில், தற்போது அவர் தீவிர கோமா நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கெளரவ், ITI ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு நேஹா என்ற பெண்ணுடன் நிச்சயம் நடந்தது. நெஹாவின் காதலன் சௌரவ் மற்றும் அவரது நண்பர் சோனு உள்ளிட்டோர் சேர்ந்து கெளரவ்வை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி கெளரவ் வீடு திரும்பும் போது அடர்ஷ் நகர் அருகே மரக்கட்டைகள் மற்றும் பேஸ்பால் பேட்டுகளால் தாக்கினர். கெளரவின் இரு கால்கள், ஒரு கை மற்றும் மூக்கு முறிந்துள்ளதுடன், தலையில் அடிபட்டுள்ளது.
கெளரவ் கோமாவுக்கு செல்லும் முன் தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சௌரவ், கெளரவின் புகைப்படத்தை காட்டி “இவனை நெஹா தான் கொல்ல சொல்லிருக்காங்க” என கூறியதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்த போது நெஹாவின் குடும்பம் கொடுத்த நகைகளை சௌரவ் பறித்துச் சென்றதாகவும், “இந்த நகைகளுக்கு உனக்கு உரிமையில்லை” என கெளரவிடம் கூறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.