
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் கண்டித்ததால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். ஒரு சில நாட்களுக்கு பிறகு சிறுமி வீட்டிற்கு வந்தார். அவரிடம் பெற்றோர் எங்கே சென்றாய் என கேட்டனர். அப்போது வேலூரைச் சேர்ந்த ஏழுமலை(32) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பழக்கமானது தெரியவந்தது.
அவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். வீட்டை விட்டு வெளியேறி சிறுமி ஏழுமலையை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு ஏழுமலை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து புதுச்சேரிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் நேற்று முன்தினம் ஏழுமலையை கைது செய்தனர்.