
தென்காசி மாவட்டம் தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கற்குடி கண்டியமேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதம் மாதத்திற்கு மேல் சங்கீதா திருமலை குமாருடன் பேசவில்லை
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி சங்கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் திருமலைகுமார் தன்னை தொல்லை செய்வதாக கூறியுள்ளார். அந்த புகாரின் பெயரில் போலீசார் சங்கீதாவையும் திருமலைகுமரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பின்பு இருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு பேசி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சங்கீதா தன்னுடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது திருமலை குமார் அவரை அரிவாளால் வெட்டி உள்ளார்.
பின்பு அங்கிருந்து திருமலை குமார் தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் போலீசார் திருமலை குமார் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.