
சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் நாய் அங்கேயே சுரண்டு விழுந்தது. இதுகுறித்து அறிந்த தன்னார்வலரான சரஸ்வதி என்பவர் படுகாயம் அடைந்த நாயை மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் கால்நடை அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நாய் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து சரஸ்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது தர்மராஜ் நாயை கல்லால் அடித்தது ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.