
சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவாளர் ஏஞ்சலா யோ, லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒருவர், “நான் கழிவுத்தாளைப் போல உணர்ந்தேன், தேவைப்படும் போது பயன்படுத்தப்பட்டு, பிறகு உதாசீனமாக எறியப்பட்டேன்” என்ற வார்த்தைகளுடன் ராஜினாமா செய்தார்.
View this post on Instagram
இந்த வார்த்தைகள் தன்னை ஆழமாக தாக்கியதாக ஏஞ்சலா தெரிவித்துள்ளார். மேலும், நிறுவன பணியிட கலாசாரம் ஊழியர்களுக்கு மதிப்பு வழங்க வேண்டிய அவசியம் பற்றி இந்த சம்பவம் உணர்த்துகிறது என்றும், appreciation என்பது வெறும் தங்க வைத்தல் கருவியாக அல்லாமல், ஒரு நபரின் முழுமையான மதிப்பீடாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், இந்த சம்பவத்துக்கான சின்னமாகக் கழிவுத் தாளில் எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தின் புகைப்படமும் அவர் பகிர்ந்திருந்தார். “இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியதின் அடையாளமாக இந்தத் தாளை தேர்வு செய்தேன். நான் ராஜினாமா செய்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த படம் உண்மையானதா, பிரதிநிதித்துவமானதா என்பதை ஏஞ்சலா தெளிவுபடுத்தவில்லை. இந்த பதிவு லிங்க்ட்இனில் வைரலாக, பலரிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
“ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு செல்வதற்கு காரணம் நிறுவனமே அல்ல, சில நேரங்களில் மத்திய மேலாளர்களின் நடத்தைதான்” எனும் கருத்தும் இதன் பின்னணி விவாதங்களில் இடம் பெற்றுள்ளது.