விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த கார்த்திகேயன் மாணவியை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் தாலி கட்ட முயற்சி செய்துள்ளார்.

இதனை எதிர்பார்க்காத மாணவி கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு பொதுமக்கள் கார்த்திகேயனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.