
கோவை அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வரும் 85 வயது மூதாட்டிக்கு கட்டிட தொழிலாளி நாச்சிமுத்து (55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்போது நாச்சிமுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி தன்னைக் காப்பாற்றி கொள்ள கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாச்சிமுத்துவை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் நாச்சிமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.