விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் சரஸ்வதி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். சரஸ்வதியில் நான்காவது மகன் வழி பேரன் ஸ்ரீதர். இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஸ்ரீதரை சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் சரஸ்வதியை அடித்து கீழே தள்ளினார். அதன் பிறகு அரிவாள்மனை யால் சரஸ்வதியின் தலை,நெத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

இதனால் சரஸ்வதி வலியில் கதறி துடித்தார். ஆனாலும் ஆத்திரம் தீராமல் அவரை தரதரவன வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து தலையில் கல்லை போட்டு ஸ்ரீதர் கொடூரமாக கொலை செய்து சரஸ்வதியின் உடலுக்கு அருகே அமர்ந்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .