
கீரன் பொல்லார் அடித்த 2 புயல் சிக்ஸர்களால் பந்து சாலையில் விழுந்த நிலையில், அதனை எடுத்துக்கொண்டு ரசிகர் ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது..
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் மீண்டும் தனது பேட் மூலம் ரசிகர்களை நம்பவைத்துள்ளார். பொல்லார்ட் ஒரு போட்டியில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார், அந்த பந்து மைதானத்திற்கு வெளியே விழுந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் சர்வதேச லீக் டி20 (ஐஎல்டி20) போட்டியில் பொல்லார்டு இந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் உரிமையாளரான மும்பை இந்தியன்ஸ் (MI) மும்பை எமிரேட்ஸ் என்ற பெயரில் மற்றொரு அணியைக் கொண்டுள்ளது, இது பொல்லார்ட் தலைமையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) மும்பை எமிரேட்ஸ் அணி, டெசர்ட் வைப்பர்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் பொல்லார்ட் அதிரடியாக தனது அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பொல்லார்டு 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அபாரமாக ஆடினார். இதன் போது பொல்லார்ட் 4 சிக்ஸர்கள் மற்றும் பல பவுண்டரிகளை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 263.15 ஆக இருந்தது. அவரது இன்னிங்ஸின் போது, பொல்லார்ட் 2 சிக்ஸர்களை அடித்தார், பந்து நேரடியாக மைதானத்திற்கு வெளியே சாலையில் விழுந்தது.

இதன் போது, ஒருமுறை ரசிகர் ஒருவர் பந்தை தன்னுடன் எடுத்துச் சென்றார். அந்த ரசிகர் பந்தை கூட திருப்பி கொடுக்கவில்லை. இரண்டாவது முறையாக பொல்லார்ட் மைதானத்திற்கு வெளியே பந்தைபறக்கவிட்ட போது, இந்த முறை விஷயம் வேறு விதமாக மாறியது. இந்த முறையும் ஒரு ரசிகர் பந்தை எடுத்தார், ஆனால் அவர் அந்த பந்தை மைதானத்திற்குள் வீசினார். இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை முதலில் சர்வதேச லீக் T20 (ILT20) தனது ட்விட்டர் கணக்கிலிருந்து பகிர்ந்துள்ளது. இதில் பயனர்களும் பல்வேறு கருத்துகளை கூறி மகிழ்ந்தனர்.
இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட் செய்த எமிரேட்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. இதில் பொல்லார்டைத் தவிர ஆண்ட்ரே பிளெட்சர் (50), முகமது வாசிம் (86) அரைசதம் எடுத்தனர். 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி 12.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் எமிரேட்ஸ் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
When it’s raining 6️⃣s, There are 2 types of cricket lovers..
1. Pick and run 🏃♂️
2. Pick and return
Which category are you?Book your tickets now : https://t.co/sv2yt8acyL#DPWorldILT20 #ALeagueApart #DVvMIE pic.twitter.com/P0Es01cMz8
— International League T20 (@ILT20Official) January 29, 2023