இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த வீடியோக்களில் விலங்குகளின் வித்தியாசமான பானியும் புத்திசாலித்தனமும் பலரையும் வியக்க வைக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு பூனையின் நம்ப முடியாத புத்திசாலித்தனத்தை காண முடிகின்றது. நம்முடைய மனதை கவரும் வகையில் ஒரு பூனையின் உறுதியும் சிக்கலை தீர்க்கும் திறனும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அழுத்தமாக மூடப்பட்டு இருக்கும் கதவை ஒரு பெண் குழந்தை பிறக்க முயற்சி செய்கிறது.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த குழந்தையால் கதவை திறக்க முடியவில்லை. அப்போது பூனை அவருக்கு உதவி செய்ய வேகமாக முன் வருகிறது. காரணம் மற்றும் விளைவு பற்றிய நுட்பமான புரிதலுடன் அந்த புத்திசாலி பூனை நிலைமையை பொறுமையாக பகுப்பாய்வு செய்து சிறுமியின் வீண் முயற்சியை கவனித்து வாயிலின் பொரி முனையை மதிப்பிடுகின்றது. சாமர்த்தியம் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறனை வெளிப்படுத்தும் பூனை தாழ்பாலை கீழ்நோக்கி இழுக்க தன்னுடைய பாதத்தை பயன்படுத்துகின்றது. தன்னுடைய முயற்சியில் வெற்றி அடையும் வரை கவனமாக அழுத்தியபடியே உள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Adorable Cats இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meowcattssss)