
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. வித்தியாசமான முறையில் பட்டாசு வெடித்து பலர் ஆபத்தை தேடி கொள்கின்றனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன் பாத் பகுதியில் ஐஐடி கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு பழைய குப்பை தொட்டியை தலைகீழாக வைத்து அதற்குள் பட்டாசு வைத்து கொளுத்தியுள்ளனர்.
பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்தது. மேலும் குப்பை தொட்டி மூன்றாவது மாடி வரைக்கும் பறந்து கீழே திரும்பி வந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ராக்கெட் மிஷின் தோல்வி அடைந்து விட்டது என கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறி வருகின்றனர் .
View this post on Instagram