சோசியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் பைக்கை தோளில் சுமந்தபடியே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது ரயில் செல்வதற்காக கேட் போடப்பட்டது.

ஆனால் ரயில் நீண்ட நேரமாகியும் ரயில் வராமல் இருந்ததால் அந்த நபர் திடீரென பைக்கை தோளில் சுமந்தபடி தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அவருடன் வந்த வாலிபர் வீடியோ எடுக்கிறார். அதனை மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்தது.