ஈரோடு மாவட்டத்தில் பவானி போக்குவரத்து கிளையிலிருந்து சூரம்பட்டு வலசு மடிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்து ஒன்று  வழக்கம் போல சூரம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கூண்டு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது. இதனை அடுத்து  மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டபோது திடிரென பேருந்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனால்  அந்த பேருந்தில் பயணித்த பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுனரும்  நடத்துனரும்  பேருந்தை தள்ளி இயக்க முயற்சி செய்தனர். ஆனாலும் பேருந்தை இயக்க இயலவில்லை. இது குறித்து போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில்  அரசு பேருந்து இயங்காமல் பாதியிலேயே நின்றதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே பயணிகள் மாற்று பேருந்தில் சென்றனர். மேலும் அரசு பேருந்தை முறையாக பராமரித்து இயக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சம்மந்தப்பட்ட துறை  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.