
உத்தரபிரதேச மாநிலம் மௌரானிபூர் பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்தில் ஒரு மருத்துவர், நோயாளியின் படுக்கையில் படுத்தபடியே மருந்துச் சீட்டை எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவர் மெத்தையில் சாய்ந்த படியே நோயாளியின் நலத்தை கேட்டு மருந்துகள் எழுதிக்கொண்டிருந்தபோது, அவரை ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த நேரத்தில் வயதான பெண்ணொருவர் மருத்துவரின் அருகில் அமர்ந்தபடி தனது உடல்நலப் பிரச்சனைகளை கூறிக்கொண்டிருந்தார்.
View this post on Instagram
இந்த காட்சி வெளியாகியதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் நிலவும் அலட்சியமும், முறையற்ற பணிப்புரைப்பும் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இதுபோன்ற நடந்துகொள்ளலே அரசு மருத்துவமனைகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது,” என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முந்தைய காலங்களில் கூட, உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்ட சம்பவங்கள் பல முறை செய்திகள் வாயிலாக வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.