திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. அதனால் செல்வகுமார் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக தினமும் கடையம் காவல் நிலையத்திற்கு சென்று வருவார்.

கடையம் காவல் நிலையத்தில் மேரி ஜெயதா என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் கையெழுத்து போட சென்ற செல்வகுமாரிடம் மேரி வழக்கை விரைவாக முடிக்க வேண்டுமானால் 30,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட செல்வகுமாரும் சரி என ஒப்புக்கொண்டார். ஆனால் செல்வகுமாருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை செல்வகுமார் மேரியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மேரியை கையும் களவுமாக கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.