வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஈரோட்டில் திமுக பெற்ற வெற்றி மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

மக்கள் எங்களுடைய ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம். டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது, வெதர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரியாக மாறும், எனவே அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஆங்காங்கே அரசு நடக்கிறது . எல்லா ஊரிலும் தாமரை மலரலாம் ஆனால் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியால் முடியாது. அந்தக் கூட்டத்தாலும் அதனை சாத்தியப்படுத்த முடியாது.

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது, டெபாசிட் வருகிறது போகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எதைப் பற்றியும் கவலை கொள்ளாத அவர்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றம் என்று நாம் தமிழர் கட்சியை துரைமுருகன் விமர்சித்தார். மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சிக்கப்படுவது தொடர்பாக பேசிய அவர், இதே மாதிரி சும்மா இருந்து விடவும் முடியாது, இதே மாதிரி அவர்களும் இருந்து விட முடியாது. இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டிய நிலை உருவாகும் என்று துரைமுருகன் பேசியுள்ளார்.