ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் மேற்கொள்ள இன்றைய கடைசி நாள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், என் உயிரோடு கலந்தது ஈரோடு, பேரறிஞர் அண்ணா வாழ்ந்த ஊர்,கலைஞர் குடியிருந்த ஊர் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் ஈடுபட்ட அவர், பெரியார் பிறந்த மண் ஈரோடு, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் கூறிய, “சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம்”என்பதை நானும் நினைவுபடுத்துகிறேன். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லாததையும் செய்வோம் என்று உறுதி கூறியுள்ளார்.