
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் சுந்தர்சி. இவர் தற்போது கேங்கேர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு சுந்தர்சியுடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு படத்தில் கேதரின் தெரேசா மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் வடிவேலு இந்த படத்தில் கைப்புள்ள மற்றும் வீரபாகு போன்ற கெட்டப்புகளில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளதோடு படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் போன்றவைகளும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சுந்தர் சி படங்களில் கிளாமர் காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் குறித்த வித்தியாசங்களை பற்றி பேசி உள்ளார். அதாவது தன்னுடைய படங்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பார்க்கக்கூடிய படங்களாகத்தான் இருக்கும் என்று சுந்தர்சி கூறியதோடு என்னுடைய படத்தில் கிளாமர் இருந்தாலும் கண்டிப்பாக அதில் ஆபாசம் இருக்காது என்று கூறியுள்ளார்.
அதோடு தன்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவைகள் இருக்காது என்றும் கூறியுள்ளார். நான் பெரும்பாலும் படங்களில் கதாநாயகிகளை அழகாக காண்பிப்பதோடு கதைக்கு பொருந்தாத ஐட்டம் பாடல்களை கண்டிப்பாக ஒருபோதும் வைக்க மாட்டேன் எனவும் எழுதும்போதே இதனை தவிர்த்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சுந்தர் சி கூறிய விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.