தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தை இயக்குனர் மகில் திருமேனி இயக்கியிருக்கிறார். விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனால் இயக்குனர் மகில் திருமேனி நேர்காணல்கள் பலவற்றில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் அவர் பேசியபோது மகிழ் திருமேனி தனக்குத்தானே வைத்துக் கொண்ட புனைப்பெயர் என்றும் தான் இப்படி தான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் பெற்றோர் வைத்த பெயர் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைப்பதாகவும் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.