
திருச்சி மாவட்டம் மேல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி சகிலா. குடும்பப் பிரச்சனை காரணமாக சகிலா தனது கணவரை பிரிந்து மகன் அஜயுடன்(23) தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அஜய் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். அப்போது சகிலா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அஜய் தாக்கியதால் கோபத்தில் சகிலா வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் போதை தெளிந்தவுடன் அஜய் தான் செய்த தவறை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.