
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது வழக்கம்போல் பயணிகளை அதிகாரிகள் சோதித்து கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசினார். அதாவது மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் செல்ல தயாராக இருந்த நிலையில் அதில் மனோஜ்குமார் (42) என்பவர் பயணம் செய்ய இருந்தார்.
இவர் சோதனையின் போது என்னுடைய பையில் குண்டு இருக்கிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவர் நகைச்சுவையாக கேட்ட நிலையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். அதன் பின் அவரிடம் எதுவும் இல்லை என்று தெரிந்த நிலையில் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் ஜோக் அடிக்கிறேன் என்று கூறி கடைசியில் பயணி ஒருவர் சிறைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.