பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி உள்ளார். அந்த நபரை கீழே இறங்குமாறு டிரைவர் அவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்கிறார். இருப்பினும் அந்த நபர் இறங்க மாட்டேன் என கூறுகிறார். இந்த வீடியோவை ஷாம்பெயின் ஸ்லோஷி என்பவர் தன்னுடைய x பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.