90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் ஷோ WWE. அந்த நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டேவ் படிஸ்டா எவ்வளவு வலியையும் தாங்கிக் கொள்வதில் தேர்ந்தவராக இருந்து மக்களிடையே பிரபலமானார். இந்த நிலையில் ஹாலிவுட் திரைப்படங்களிலும் டேவ் படிஸ்டா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மார்வெல் யூனிவர்சில் கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கேரக்டரில் டேவ் படிஸ்டா நடித்தார்.

இதனைத் தொடர்ந்து பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட திரைப்படங்களிலும் டேவ் படிஸ்டா நடித்துள்ளார் கடந்த ஆறாம் தேதி கனடாவில் நடந்த டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் டேவ் படிஸ்டா பங்கேற்றுள்ளார். அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. கடந்த 2022-ஆம் ஆண்டு டேவ் படிஸ்டா எடுத்த புகைப்படங்களையும் இப்போது இருக்கும் தோற்றத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜிம் லுக்கில் இருந்து மாறுபட்டு ஒல்லியான தோற்றத்தில் டேவ் படிஸ்டா இருக்கிறார். இதனை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.