சீன நாட்டில் பணி செய்யும் அலுவலகத்தில் வாழை வளர்க்கிறார்கள். இது தொடர்பான வீடியோ அவர்களின் instagram பக்கமான சாங்ஷுவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது அலுவலகத்தில்  பணி செய்யும் போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக அவர்கள் மேஜையில்  வாழை வளர்க்கிறார்கள்.

அதன்படி ஒரு வார காலத்திற்கு அவர்கள் அதை பராமரிக்கும் போது பச்சை நிற தாரிலிருந்து ஒவ்வொரு நாளும் படிப்படியாக வாழை வளர ஆரம்பிக்கிறது. இதிலிருந்து முதலில் பச்சை நிறத்தில் தொடங்கி அதன் பிறகு மஞ்சள் நிறமாக மாறி வாழைப்பழமாக உருவாகிறது. இதைப் பார்க்கும்போது ஒவ்வொரு நொடியும் அளவில்லா மகிழ்ச்சி கொடுப்பதாக கூறுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.