ராஜஸ்தான் மாநிலத்தில் நாகவுர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலையில் ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 5 பேர் இருந்தனர். இந்த கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் ஓட்டுநர் காரை திருப்ப முயற்சித்தார். அப்போது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கார் சாலையில் 8 முறை பல்டி அடித்தது.

பின்னர் சாலையின் அருகில் உள்ள ஷோரூம் கேட்டில் மோதி நின்றது. அந்த ஷோரூமில் நின்றவர்கள் காரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்று பதறிப் போய் ஓடி வந்த நிலையில் முதலில் டிரைவர் இறங்கி வந்தார். பின்னர் காரில் இருந்த அனைவரும் ஒவ்வொருவராக இறங்கி வந்தனர். ஆனால் ஒருவருக்கு கூட காயமே ஏற்படவில்லை. மேலும் இவ்வளவு பெரிய விபத்தில் அவர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படாத நிலையில், அவர்கள் காரில் இருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட விபத்தை பற்றி யோசிக்காமல் ஒரு கப் டீ கிடைக்குமா என்று கேட்டனர். மேலும் தற்போது அது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.