
சிக்கிமில் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் கிராந்திகாரி மோர்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த நிலையில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் பொறுப்பேற்றார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இவர் நேற்று முன்தினம் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் நேற்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய இந்த முடிவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகு குமாரி ராய் திடீரென ராஜினாமா செய்ததற்கான காரணம் தெரியவில்லை. மேலும் அவருடைய கணவர் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்தது சிக்கிம் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.