
கன்னியாகுமரி மாவட்டம் விளங்கோடு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற விஜயதாரணி திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் இதுவரையில் அவருக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக விஜயதரணி பேசியதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே இது பற்றி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டார்.
நேற்று நடந்த பதவியேற்பு விழாவின்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்க பட்ட நிலையில் அதிலும் விஜயதாரணியின் பெயர் இல்லை. இந்த தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி கூறியதாவது, விரைவில் பதவியோ அல்லது பொறுப்போ வழங்கப்படும் என்று மேலிடம் உறுதி கொடுத்துள்ளது. நான் ஏற்கனவே அதிருப்தியை தெரிவித்து விட்டதால் நிச்சயம் அந்த செய்தி விரைவில் உங்களை வந்தடையும். எனக்கு உறுதியாக நல்ல பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு நீண்ட கால அனுபவம் இருப்பதால் அவர் கட்சியை நன்றாக வழி நடத்தி செல்வார் என்றார்.