
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுமார் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் ஆய்வு நடக்கிறது.
இவ்வழக்கில் கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அதிமுக தொழில்நுட்ப அணியின் நிர்வாகி கவின் தலைமறைவாகி உள்ளார். வீட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரும், விஜயபாஸ்கர் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.