
திருவனந்தபுரம் சாலையில் எரிந்த நிலையில் ஆம்னி வேன் ஒன்று டிரைவர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. வேனில் தீ பற்றிய இதை உணர்ந்து கொண்ட ஓட்டுநர் வெளியில் குதித்து உயிர் தப்பிய நிலையில் அவரால் அந்த வேனை நிறுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த வேன் சாலையில் ஓட்டுநர் இல்லாமல் இருந்த நிலையில் வந்துள்ளது.
— செய்திச் சோலை (@SeithisolaiNews) November 23, 2023
இதனைப் பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளனர். இதயைடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்னி வேனில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.