தூத்துக்குடியில் திமுக கட்சியின் எம்.பி கனிமொழி என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு என்பது மிகவும் வருத்தத்தை தரக்கூடியது. ஆனால் மத்திய அரசு எதையுமே தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் அவர்களே மிகப்பெரிய தேசிய பேரிடர்கள் தான். தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது 7 நாட்களுக்கு முன்பாகவே தெரிவித்தோம் என்று கூறினார்கள்.

ஆனால் அது உண்மை இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தினார். அதேபோன்று இன்றும் கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பாக 7 முன்பாகவே எச்சரித்ததாக கூறியுள்ளனர். ஆனால் அதுவும் முற்றிலும் பொய். இது உண்மைக்கு புறம்பானது என்பதை கேரள முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வித உதவியும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறினார்.