ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்படும் நேரத்தில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் இடுப்பைப் பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆண் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புளூ சட்டையணிந்த அந்த நபர், பின்புறமாக நின்று அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

சம்பவத்தை உணர்ந்த உடனே அந்த பெண் அதிகாரி தன்னிடம் நடந்த அவமதிப்பை சகிக்காமல் திரும்பி அந்த நபருக்கு நேரடியாக இடியொன்றை கொடுத்து, அவரை நிலை தடுமாற செய்தார். பின்னர் அந்த நபரையும் போலீசாருடன் சேர்ந்து கைது செய்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதுடன், அந்த பெண் அதிகாரியின் துணிச்சலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான பிறகு, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கோபத்தையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். “ஒரு பெண் அதிகாரியையே இப்படி அவமதிக்கிறார்கள் என்றால், பொதுமக்கள் பாதுகாப்பு நிலை என்னவாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சிலர் குற்றவாளியின் உடலுறுப்பு துண்டிக்க வேண்டும் எனக் கோரியுள்ள கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.