கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சில நபர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு உள்ளவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது சக்திகுமார் மற்றும் கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

அதன்பின் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர். பின்பு காவல்துறையினர் அங்குள்ள இளம் பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.