
மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்க எதில் முதலீடு செய்யவேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள் எனில், உங்களுக்கான பதில் எஸ்பிஐ ஏடிஎம் உரிமம். ஏனெனில் எஸ்பிஐ வங்கியின் ATM அமைக்க முதலீடு செய்வதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் வருவாய் ஈட்டலாம். ஏடிஎம் நிறுவும் வேலை வங்கி ஒப்பந்தத்தின்படி மேற்கொள்கிறது.
இப்பணியை வங்கியின் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பல இடங்களில் செய்து வருகின்றனர். ஏடிஎம் நிறுவலுக்காக எஸ்பிஐ டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் போன்றவற்றுடன் கைக்கோர்த்து உள்ளது. ஏடிஎம் உரிமையை துவங்க நீங்கள் ரூ.2 லட்சம் பாதுகாப்பு டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும் மற்றும் ரூ.3 லட்சம் செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும்.
இந்த முதலீட்டை செய்த பிறகு ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் வங்கி உங்களுக்கு ரூ.8 மற்றும் இருப்பு காசோலை, நிதி பரிமாற்றம் ஆகிய ஒவ்வொரு பணம் இல்லா பரிவர்த்தனைக்கும் ரூ. 2 சம்பாதிக்கலாம். இதன் வாயிலாக மாதம் ரூ.60 -ரூ. 70 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.