
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மடங்கு அதிகம். இந்த நிலையில் sbi வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் தொகையை அறியும் சேவையை வீட்டில் இருந்தவாறு பதிவு செய்யும் முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எஸ் பி ஐ வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலமாக REG என்று டைப் செய்து 092234 88888 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
பத்து நிமிடங்களில் உங்களது மொபைல் எண் மிஸ்டு கால் சேவையில் இணைக்கப்பட்டு விடும்.
அடுத்ததாக 9223766666 என்ற எண் மூலம் பேலன்ஸ், 9223866666 என்ற எண் மூலம் கடைசி ஐந்து பரிவர்த்தனை விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.