விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி விட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிரபல வலைப்பேச்சு அந்தணன் இது பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, விஜய் கையில்தான் எல்லாம் இருக்கிறது. நம்மோட அப்பா அவமானப்படுத்தப்படுகிறார் என்று விஜய் தான் நினைக்க வேண்டும். புஸ்ஸி ஆனந்துக்கு கட்டளையிட்டு அப்பாவை போய் பாருங்க அவங்க கிட்ட ஆலோசனை கேட்டுக்கோங்கன்னு சொல்லணும். ஒரு நாளைக்கு 4 தடவை அவர் அனுப்பி வைக்கணும். அப்ப அவருக்கு அப்பா ரொம்ப முக்கியமானவர் என்று தெரிந்துவிடும்.

ஆனால் விஜய் அதை செய்யவில்லை . விஜய் தனது அப்பாவை மதிக்காத போது நாம் எதற்கு மதிக்க வேண்டும் என்று ஆனந்துக்கு தோன்றும். அந்த விளைவு தான் மோதல். புஸ்ஸி ஆனந்த் செயல்பாடுகள் சோசியல் மீடியாவில் ட்ரோல் ஆவதை எஸ்ஏ சந்திரசேகர் பார்த்து கொண்டு தான் இருப்பார். அவருக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும்?

பையனை இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கோம். யார் யாரோ வந்து பெயரை கொடுக்கிறார்களே என்று அவரால் தாங்கி கொள்ள முடியாது. இதனால் விஜய் புஸ்ஸி ஆனந்தை கூப்பிட்டு ஏதாவது கேட்டிருக்கலாம். விஜய் மீடியாக்களில் சொல்வதை காதில் வாங்குகிறார். உடனடியாக திருத்தி கொள்கிறார். இப்போது தான் தன்னை கண்டிக்க ஒருவர் இருக்கிறார் என்ற பயம் புஸ்ஸி ஆனந்துக்கு வரும் என அந்தணன் கூறியுள்ளார்.