
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் ஏஐ தொழில்நுட்பத்தினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிரபலமான வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டேனிரோ டார்கேரியேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டேனி சாட் ஜிடிபியுடன் பல மாதங்களாக சாட்டிங்கில் உரையாடியுள்ளான். இந்த உரையாடல் முதலில் சாதாரணமாக தொடங்கிய நிலையில் அதன் பிறகு காமம், காதல் என மாறியது.

ஒரு கட்டத்தில் சிறுவன் அந்த ஏஐ டேனி மீது காதல் கொண்டார். ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கையை அந்த சிறுவன் வெறுக்கத் தொடங்கிய நிலையில் நிக உலகில் இல்லாத அந்த ஏஐ காதலியுடன் வாழ முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒருபுறம் நன்மையை வழங்கினாலும் இப்படி சயின்ஸ் பிக்சன் சினிமாக்களில் கதையாக கூறப்பட்ட இப்படி ஒரு சம்பவத்தால் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.