தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு குசேலன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மம்தா மோகன் தாஸ் நடித்திருந்த நிலையில் அவருடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதாவது மகாராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த  அதிர்ச்சி தகவலை அவர் கூறியுள்ளார். குசேலன் படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு  நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் 2 நாட்கள் சூட்டிங் சென்றுள்ளார். இருப்பினும் அவரை படத்தில் இருந்து முழுமையாக நீக்கியுள்ளனர். இந்த படத்தை பார்த்தபோது தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டதை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததாகவும் அந்தப் படத்தில் ஏன்டா நடிச்ச்சோம்னு நினைத்து  வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.