தமிழகம் வந்துள்ள உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனம் கூட்டணி குறித்து பேசி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும் என்று ஏற்கனவே யூகித்த ஒன்றுதான்.

அது இன்று அறிவிப்பாக வெளிவந்துவிட்டது. விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி வைக்கக்கூடாது என்பதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தெளிவாக இருக்கிறது. மேலும் ஒரு அழுத்தம் மற்றும் நெருக்கடியின் அடிப்படையில் தான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்று கூறினார்.