அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு ராதிகா சரத்குமார் தற்போது ஆவேசமான ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில், ஏண்டா படுபாவி, ஜெயிலுக்குப் போய் நீ திருந்த மாட்டியா, உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வச்சிருக்காங்களே, உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முதல்வர், மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ராதிகா குறிப்பிட்டுள்ளார்.