தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இவர் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து கொண்டே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, சமீபத்தில் தமிழகத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நியமிக்கப்பட்ட செயலாளர் பிரதீப் யாதவ் யார்.? அவர் ஒரு வடநாட்டு ஐஏஎஸ் அதிகாரி. ஏன் இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லையா.?

எதற்காக வடநாட்டைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை துணை முதல்வர் தன் செயலாளராக நியமிக்க வேண்டும். உங்களுக்கு செயலாளராக இருக்கும் திறமை தமிழர்களுக்கு இல்லையா. இதை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் திமுக அரசு தொடர்ந்து ஹிந்தி மொழியை திணிப்பதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை ஏன் உங்கள் செயலாளராக நியமிக்க கூடாது எனவும் வேல்முருகன் கேட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது