
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக ராஜேஷ் பருவா பெஜவாடா என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் அந்த மாணவனை அழைத்து ராஜேஷ், ஏன் மதிப்பெண் குறைவாக எடுத்து இருக்கிறாய் என்று கடுமையாக திட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தன்னிடம் இருந்த கத்தியால் ஆசிரியரை குத்தி கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்து சக மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியிலேயே ஆசிரியரை மாணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.