கோயம்புத்தூர் 100 அடி சாலையில் இருந்து நவ இந்தியா நோக்கி மேம்பாலம் செல்கிறது. அந்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர் பாட்டிலுடன் ரகலையில் ஈடுபட்டனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வரும் நபர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன், கௌதம் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.