தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருசென்னம்பூண்டி மின்சாலையில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தார்.

அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனால் போலீசார் செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.