இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் ராடிசன் ரெட் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஹோட்டலில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பெண் விமான ஊழியர்கள் தங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவ நாளன்று விமானத்தில் பணி புரியும் பெண் ஊழியர்கள் அந்த ஹோட்டலில் தங்கி வந்துள்ளனர். அப்போது அதிகாலையில் திடீரென மர்ம நபர் ஒருவர் பெண் ஊழியர் ஒருவரின் அறைக்குள் நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் சத்தம் போட்டு உள்ளார்.

இதனால் அந்த நபர் துணிகளை தொங்கவிடும் ஹேங்கர் மூலம் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். பின் அந்த பெண் தப்பியோட முயன்ற போது அந்த மர்ம நபர் அவரை கீழே தள்ளிவிட்டு தரதரவென இழுத்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் ஊழியருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அதன்பின் அந்த மர்ம நபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வந்து விடக்கூடாது என அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் ஊழியரை மருத்துவமனையிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் ஏர் இந்தியா நிறுவனம் அந்த ஹோட்டல் நிர்வாகத்துக்கு இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.