தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திமுக கட்சியின் பேச்சாளர் ராவணன் மிகவும் ‌ தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சீமான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் அவர் பேசியதாகவும் எனவே உடனடியாக அவர் மீது தக்க நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தங்கள் பதிவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீடியோவில் ராவணன் பேசியதாவது, கண்டிக்க திராணியற்ற பிளாக் டிக்கெட் நாயே, விஜயே உன்னை பார்த்து நான் கேட்கிறேன். உங்க அப்பனுக்கு வாழ்வு கொடுத்ததே திராவிட முன்னேற்றக் கழகம் தான். நீ இன்னைக்கு வந்த சின்ன பையன். உங்க அப்பன வீதியில் நடக்க விட்டதே திராவிட மாடல்தான். தம்பி நண்பனும் அல்ல, போக்கிரியும் அல்ல, கத்தியும் அல்ல, துப்பாக்கியும் அல்ல நீ‌‌ யாரு வெறும் ஒண்ணா நம்பர் போக்கிரி. தவெக காரனை பார்த்து கேட்கிறேன்.

ஏல சின்ன பயலே. ஒரு மேடை கிடைச்சா மைக் கிடைச்சா எல்லாம் பேசலாமா. எச்சரிக்கை. எங்க திராவிட மாடலை பற்றியும் எங்கள் சின்னவரை பத்தியும் பேசுவதற்கு முன்னாடி நீ தமிழ்நாட்டில் நடமாட முடியாது. மத்தியிலாலும் பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட தரல. அதெல்லாம் கேட்க வக்கில்லை துப்பில்லை துப்பு கட்ட பயலுக. இன்னொரு பையன் கத்தி பேசுறவன் எல்லாம் பெரிய ஆளுகை இல்லைன்னு சொல்றான். உன்கிட்ட கேட்டாங்களா. தேசிய தலைவர்களை கொச்சைப்படுத்துகிற நாய். சீமான் ஒரு நாய். நீ இனி தமிழ்நாட்டில் நடக்க முடியாது. டேய் மானங்கெட்ட, வெக்கங்கெட்ட நாயே சீமான் எதற்காக ரஜினியை சென்று பார்த்தாய். நீ இன்னொரு முறை எங்கள் தலைவரைப் பற்றி பேசினால் நீ கத்தி பேசலாம் ஆனால் நாங்கள் இனி கத்தியை கொண்டு வந்து தான் பேசுவோம் எச்சரிக்கிறேன் என்று மிகவும் மோசமான வார்த்தைகளால் அவர் பேசியுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,